கொளத்தூரில் இனி போட்டியிடமாட்டேன்- ஸ்டாலின் அதிரடி

Estimated read time 0 min read

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியிலேயே பெரிய அழுத்தம் வந்தாலும், அவர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளத்தூர் தொகுதி தவெக எம். எல். ஏ. வி. எஸ். பாபு அண்மையில் காலமான நிலையில், அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இந்நிலையில்

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியிலேயே பெரிய அழுத்தம் வந்தாலும், அவர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில், ஏற்கனவே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் எழிலன் நாகநாதன் வாய்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட இனிகோ இருதயராஜ்க்கும் மீண்டும் வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக உறுதியாக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் நம்புகிறார். கொளத்தூர் என்பது ஸ்டாலினின் சொந்த தொகுதி, திமுகவின் கோட்டை. அங்கு யாரை நிறுத்தினாலும் வெற்றி நிச்சயம் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியும் திமுகவுக்கு பலமான தொகுதி. இனிகோ இருதயராஜ் ஏற்கனவே அங்கு மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் என்பதால், அவருக்கே மீண்டும் வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

கட்சியில் பலர் வற்புறுத்தியும் ஸ்டாலின் போட்டியிட மறுப்பதற்கு காரணம், அவர் 6 தொகுதி பிரச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஒரு தொகுதியில் மட்டும் முடங்கி விடக்கூடாது என்பது தான் என்று கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையுமா? இல்லை எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author