செங்து நகரில் சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரான் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரிலுள்ள துச்சியாங்யேனில் சந்திப்பு நடத்தினர்.

துச்சியாங்யேன்  நீர்சேமிப்புத் திட்டப்பணி உலகில் தற்போதும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் பண்டைக்கால நீர்சேமிப்புத்திட்டப்பணியாகும். அதன் வரலாறு மற்றும் அர்த்தம் பற்றி ஷிச்சின்பிங் மெக்ரானிடம் எடுத்து கூறினார்.ஒரு நாட்டின் வலிமை மற்றும் தேசிய மறுமலர்ச்சிக்குப் பொருளாதார மற்றும் தார்மீக நாகரிகத்தின் இசைவான வளர்ச்சி தேவைப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், சீனாவும் பிரான்ஸும் கிழக்கு மற்றும் மேலை நாகரிகத்தின் சிறந்த பிரதிநிதியாகத் திகழ்கின்றன என்று தெரிவித்தார்.மனித வரலாற்றிலும் நாகரிகத் துறையிலும் முக்கியத்துவம் வாயந்த இரண்டு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் உலக அமைதி மற்றும் மனித மேம்பாட்டுக்கு மேலதிக பங்காற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author