காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

Estimated read time 1 min read

காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மீன் கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், காசிமேடு துறைமுகத்தில் மீன் கடைகள் திறக்காமல் வெறிச்சோடி காணப்பட்டது.

துறைமுக நுழைவாயிலில் விசைப்படகுகளை நிறுத்தியும், கருப்புக்கொடி ஏற்றியும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவர் சங்கங்களை ஒன்றிணைத்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாகவும், மீன்வளத்துறை அமைச்சர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author