சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில், உள்ளே ஆள் யாரும் இல்லாத எலக்ட்ரிக் கார் ஒன்று தானாகவே பார்க்கிங் செய்ய முயன்ற வினோத சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரவு நேரத்தில் அந்தக் கார் தாமாகவே இயங்கி பார்க்கிங் செய்ய முயற்சி செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த எலக்ட்ரிக் கார் ஒரே இரவில் 868 முறை முன்னும் பின்னும் நகர்ந்து பார்க்கிங் செய்ய முயற்சி செய்துள்ளது. இவ்வளவு முறை அந்தக் கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது பார்ப்பவர்களுக்குப் பெரும் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வினோதமான நிகழ்வு முழுவதும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் பலரிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
Nachts allein im Parkhaus.
Selbstfahrendes E-Auto versucht 868 Mal einzuparken.
In einem Parkhaus China macht sich ein Auto ohne Fahrer mitten in der Nacht selbstständig. Wie von Geisterhand versucht der Wagen, eine Parklücke zu finden – und hat dabei einige Schwierigkeiten. https://t.co/DI1h02IoKM
— Ramses III
(@RAMSESderDritte) November 19, 2026
ஆளில்லாமல் இந்தக் கார் ஒரே இரவில் 868 முறை இப்படி நகர்ந்ததற்குக் காரணம் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா, அல்லது யாரேனும் ரிமோட் வசதியைப் பயன்படுத்தி அந்தக் காரை இயக்கினார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது குறித்த உண்மையான காரணம் தெரிந்தால் மட்டுமே இந்தச் சம்பவத்தின் பின்னணி முழுமையாகத் தெரியவரும்.

