விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு ஜாமின் தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதேபோல, தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் கூறியது.