மின்சார இன்வெர்ட்டர் மற்றும் மேம்பட்ட ரோபோட்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பதற்கு சீனா எதிர்ப்பு

Estimated read time 1 min read

அண்மையில் வெளிநாட்டின் மின்சார இன்வெர்ட்டர் மற்றும் மேம்பட்ட ரோபோட் உபகரணங்களை “உள்ளடக்கப் பட்டியலில்” அமெரிக்கா சேர்த்துள்ளது பற்றி சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 30ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா உடனடியாக இத்தகைய தடை நடவடிக்கைகளை நீக்கி, தவறான செயலை நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார். அதோடு, அமெரிக்கா தொடர்ந்து சுயவிருப்பப்படி செயல்பட்டால், சீனா தனக்குரிய உரிமைகளைப் பேணிக்காக்கும் வகையில், உறுதியுடன் பதிலடி எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

படம்:VCG

You May Also Like

More From Author