ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு !

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில் லோகோ பைலட் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில், வாளையாறு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே, ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளிக்க முயன்றபோது யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பாலக்காடு வனத்துறையினர், ரயிலை வேகமாக இயக்கிய லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You May Also Like

More From Author