இந்திய சந்தையில் சீனாவிலிருந்து மலிவான விலையில் ஸ்டீல் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுக்க, குறிப்பிட்ட ஸ்டீல் பொருட்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக சீனாவிலிருந்து மிக குறைந்த விலையில் ஸ்டீல் பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொண்டு வந்தன.
இந்திய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேம்பாட்டு சங்கம் என்ற தொழில்துறை அமைப்பு, இந்தப் பிரச்சினையை முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்தது.
சர்வதேச அளவில் ஸ்டீல் தேவை குறைந்ததால், சீனா தனது உபரி உற்பத்தியை இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது.
இதனை தடுக்க ஸ்டீல் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
சீன ஸ்டீலுக்கு செக் வைத்த இந்தியா: 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்தது
