‘சிகந்தர்’ படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 

பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.
அடுத்த வருட ஈகை திருநாளன்று வெளியாக திட்டமிட்டுள்ள இந்த திரைப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
பிங்க்வில்லாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம், ‘அனிமல்’ திரைப்படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அவர் நடிக்கவுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம் இது.
அதுமட்டுமின்றி, சல்மான்கானுடன் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தயாரிப்பு தொடங்க உள்ளது.
லொகேஷன் ஸ்கவுட்டிங் உள்ளிட்ட ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.

You May Also Like

More From Author