“மண்டைல ஏதாவது இருக்கான்னு கேட்டீங்கள்ளா?” உங்க கொசு வழங்கும் திட்டம் ஞாபகம் இருக்கா….? பதிலடி கொடுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ்….!! 

Estimated read time 1 min read

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் (Virtual Warriors) எனப்படும் சமூக வலைதளப் பக்க நிர்வாகிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். தவெகவினர் குறித்துப் பேசிய அவர், “அவர்கள் மண்டையில் ஏதாவது இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்திலும், சோசியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேயர் பிரியாவின் இந்த விமர்சனம் தவெக தொண்டர்கள் மற்றும் விர்ச்சுவல் வாரியர்ஸ் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வேலைகளில் அவர்கள் உடனடியாக இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, மேயர் பிரியாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவரது பழைய செய்திச் சேகரிப்பு வீடியோ ஒன்றை தவெகவினர் தேடிக் கண்டுபிடித்து எக்ஸ் வலைதளத்தில் தற்சமயம் வைரலாக்கி வருகின்றனர்.

அந்தப் பழைய வீடியோவில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேயர் பிரியா பேசுகையில், மக்களுக்கு “கொசுவலை வழங்கும் திட்டம்” என்று கூறுவதற்குப் பதிலாக, நாக்கு பிறழ்ந்து “கொசு வழங்கும் திட்டம்” என்று தவறாகக் குறிப்பிட்டிருப்பார். இந்த வீடியோவைக் கையில் எடுத்துள்ள தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ், “மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்னால் நீங்கள் என்ன பேசினீர்கள் என்று பாருங்கள்” என்ற ரீதியில் எக்ஸ் பக்கத்தில் மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து மேயர் பிரியாவிற்குத் தங்களது பாணியில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author