நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்டது.
‘தாய்க் கிழவி’ திரைப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இத்திரைப்படத்தை ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘டர்மரிக் மீடியா’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, பால சரவணன், அருள்தாஸ் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்தார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
