கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது;

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது என்றும் IMD அறிவித்துள்ளது.
முன்னதாக மே 15ஆம் தேதி, வானிலை மையம் கேரளாவில் மே 31ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று அறிவித்தது நினைவிருக்கக்கூடும்.
“தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தென் அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகள், கொமோரின், லட்சத்தீவுகள், தென்மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

You May Also Like

More From Author