லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் “பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை வழிநடத்திய மன்மோகன் சிங், சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து இதுபோன்ற “வெறுக்கத்தக்க, நாகரிகமற்ற மற்றும் முரட்டுத்தனமான சொற்களை எந்த முந்தைய பிரதமரும் பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.
மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “பொது சொற்பொழிவின் கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.