சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரப் பணி குழுக்கள் 24ஆம் நாள் செவ்வாய்கிழமை காணொளி வழியாக முதல் கூட்டத்தை நடத்தின. இரு நாடுகளின் துணை நிதி அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இரு நாடுகள் மற்றும் உலகளாவிய ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள் மற்றும் கொள்கைகள், இரு தரப்பு பொருளாதார உறவு, ஒத்துழைப்புடன் உலகளாவிய அறைக்கூவல்களை சமாளித்தல் உள்ளிட்டவை குறித்து ஆழமாகவும், நேர்மையாகவும் ஆக்கப்பூர்வமாரவும் விவாதிக்கப்பட்டது.
மேலும், இரு தரப்புகளும் தொடர்ந்து தொடர்பை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன என்று சீன நிதி அமைச்சகத்தின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹெலிஃபெங், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் ஏலன் ஆகியோர் கடந்த ஜுலையில் பெய்ஜிங்கில் எட்டிய ஒத்த கருத்துகளின் படி, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரக் கூட்டங்கள் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.