சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள், 2024ஆம் ஆண்டு குலியன் சீன-அமெரிக்க இளைஞர்களுக்கான பரிமாற்ற நடவடிக்கைக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறுகையில்,
சீன மற்றும் அமெரிக்காவின் பல்வேறு துறைகளின் இளைஞர்கள் ஃபூசௌ நகரில் திரண்டு, இரு நாட்டு மக்களுக்கிடையில் பரிமாற்றத்தையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தினர். உயிர் ஆற்றல் மற்றும் கனவுகள் மிகுந்த இளைஞர்கள், இரு நாடுகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானவர்கள்.
இளைஞர்கள் ஒருவருடன் ஒருவர் பரிமாற்றத்தை ஆழமாக்கி, நட்புறவை வலுப்படுத்தி, இரு நாட்டு நட்புறவைத் தொடர்ந்து பரவல் செய்து, இரு நாடுகளின் உறவின் சீரான, நிதானமான வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.