சீனாவின் ஷாங்காயில் உள்ள பல இளைஞர்கள் கல்வி கற்க மாலை நேர வகுப்புகளை தேர்வு செய்கின்றனர். ஷாங்காய் பொது மக்கள் கலை மையத்தில், இந்த இலையுதிர்காலத்தில் தொடங்கப்பட்ட 380க்கும் மேற்பட்ட வகுப்புகளில் 9000 பேர் சேர்ந்துள்ளனர்.
90 சதவீதத்திற்கும் அதிகமான மாலை நேர வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் 1980கள் மற்றும் 1990களில் பிறந்தவர்கள். பொதுவாக மாலை நேர வகுப்புகள் வேலைக்கு செல்வோரின் கல்விப் பின்னணியை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன.
தற்போது இந்தக் கல்விமுறை விரிவாக்கப்பட்டு, இதில் மேலதிக கலாச்சாரம் மற்றும் கலைப் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு ஷாங்காய் பொதுமக்கள் கலை மையத்தில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதில் 18 முதல் 55 வயதுடையவர்கள் வரை சேர்ந்து படிக்கலாம். தற்போது மாலை நேர வகுப்புகள் ஷாங்காயின் 16 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுகின்றன. மேலும் பாரம்பரிய கலாச்சாரம், ஃபேஷன், ஒப்பனை மற்றும் சமையல் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
கடந்த 7 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 450 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பொதுமக்களுக்கு மேலதிக கலாச்சாரச் சேவைகளை வழங்கும் வகையில், மேலதிக நிறுவனங்கள் இத்திட்டத்தில் சேர வேண்டும்.