சான் ஃபிரான்சிஸ்கோவில் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பிலும், ஏபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் பங்கெடுத்த பிறகு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 18ஆம் நாளிரவு சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிற்குத் திரும்பினார்.
உள்ளூர் நேரப்படி 17ஆம் நாள் பிற்பகல், சான் ஃபிரான்சிஸ்கோ நகராட்சித் தலைவர் உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கை வழி அனுப்பினர்.
மேலும், அமெரிக்கா வாழ் சீனர்களும், அந்நாட்டில் படிக்கின்ற சீன மாணவர்களும் வழியனுப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்து, இப்பயணம் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.