தற்போது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புதிய சுற்று புரட்சி உயர்வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன.
அறிவியல் ஆய்வு முறை மாறியுள்ளது. இந்நிலையில், உலகம் மற்றும் இயற்கையை புரிந்து கொள்வது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவது, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப போட்டியைச் சமாளிப்பது ஆகியற்றுக்கு அடிப்படை ஆய்வு முக்கியமானது.
அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு சீன அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இது குறித்து, இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் டேவிட் க்ரோஸ், சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில், 10 ஆண்டுகளுக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அடிப்படை அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பெரிய நாடான சீனா, அடிப்படை அறிவியல் துறையில் தலைமை பங்காற்ற வேண்டும். உலகத்தின் முன்னணி ஆய்வகத்தை அமைக்க கூடிய கட்டத்தை சீனா அடைந்துள்ளது. ஃபாஸ்ட் என்னும் உலகத்தின் மிகப் பெரிய ரேடியோ தொலைநோக்கியைச் சீனா கொண்டுள்ளது.
இது அற்புதமான சாதனையாகும். எதிர்காலத்தில், பல்வேறு நாடுகள் புத்தாக்க முறையை விரிவுப்படுத்தி, பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றிக்கான சர்வதேச ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.