2வது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு  

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் இரட்டை முன்னேற்றங்களைக் குறிக்கிறது.
இதில் முதலாவதாக வந்த தகவல், இந்திய கடற்படை தனது இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை (எஸ்எஸ்பிஎன்) ஐஎன்எஸ் அரிகாட்டை இயக்கும் தருவாயில் உள்ளது என்பதுதான்.
அதே நேரத்தில் மற்றொரு தகவலாக, ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை (எஸ்எஸ்என்) கட்டமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு காட்டியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
இந்த திட்டங்கள் முழுமையடையும்போது, இந்தியாவின் கடற்படை வலிமை புதிய உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author