சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 26ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், 2024ஆம் ஆண்டில் சீன அரசின் நட்புறவு பரிசு பெற்ற வெளிநாட்டவர்கள் மற்றும் சீனாவில் பணி புரியும் வெளிநாட்டு நிபுணர்களுடன் கலந்துரையாடி பரிமாறிகொண்டார்.
சீனாவின் சீரித்ருத்தம் மற்றும் வளர்ச்சி, அரசுப் பணி தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் லீச்சியாங் உணர்வுபூர்வமாகக் கேட்டறிந்தார். பிரிட்டன, போலந்து, மாலி, ருமேனியா, ஜெர்மனி, பாகிஸ்தான் முதலிய நாடுகளின் நிபுணர்கள், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றம், சர்வதேசப் பரவல், திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பது உள்ளிட்டவை குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி தொடர்ந்து விரிவாகி, வெளிநாட்டுத் திறமைசாலிகளை சீனா வரவேற்பதாக லீச்சியாங் வலியுறுத்தினார்.