உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவின் சான் ஃரான்சிஸ்கோவிலுள்ள ஃபிலோலி பண்ணைத் தோட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் சந்திப்பு நடத்தினார்.
சீன-அமெரிக்க உறவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த நெடுநோக்கு மற்றும் ஒட்டுமொத்த தன்மையுடன் கூடிய விவகாரங்கள் பற்றியும், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய விவகாரங்கள் பற்றியும், இரு தரப்பினரும் நேர்மையான மற்றும் ஆழமான முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில்,
இந்த முறை சான் ஃரான்சிஸ்கோ சந்திப்பில், சீனாவும் அமெரிக்காவும் ஒரு புதிய விருப்ப காட்சியை உருவாக்க வேண்டும் என்றும், இரு நாட்டு உறவுக்கான 5 அடிப்படை ஆதாரங்களை கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்காக, சரியான புரிதலை உருவாக்குவது, பயனுள்ள முறையில் கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்துவது, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை முன்னெடுப்பது, பெரிய நாடுகளின் பொறுப்புகளை ஏற்பது, மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை அதிகரிப்பது ஆகிய 5 அம்ச நடவடிக்கைகளுக்காக கூட்டாகபாடுபட வேண்டும்.