ஐ.நாவின் 4வது உலகத் தரவு மன்றக்கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 24ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில், வலிமை, பசுமை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்ட உலக வளர்ச்சியை நனவாக்குவது, பல்வேறு நாட்டு மக்களின் பொது விருப்பமாகும். ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்குச் சீனா எப்போதுமே ஆதரவளித்து, இதைச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து, உலக வளர்ச்சி முன்மொழிவின் கட்டுக்கோப்புக்குள் சர்வதேசத் தரவு ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தரவுத் துறையில் திறப்பு மற்றும் கூட்டு வெற்றி வாய்ந்த சர்வதேச ஒத்துழைப்பு முறையைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.