ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் விபத்து – ரெயில்வே நிர்வாகம் விளக்கம்

சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

ஆதம்பாக்கம் பகுதியில் பணியின் போது திடீரென விபத்து ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

You May Also Like

More From Author