அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் மீதான ஒரு விசாரணை அறிக்கையைச் சீனத் தேசிய கணினி வைரஸ் முன்னெச்சரிக்கை மையமும், இணையப் பாதுகாப்பு நிறுவனம் 360வும் வெளியிட்டன.
இதில் சீனாவிலும் பிற நாடுகளிலும் நிகழ்ந்த ஏராளமான இணையத் தாக்குதல் சம்பவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது, சிஐஏ நீண்டகாலமாக நடத்திய உலகளாவிய இணைய தாக்குதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
சர்வதேசச் சமூகத்தின் கவலைக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து பதிலளிக்க வேண்டும். இணையத்தைப் பயன்படுத்தி உலகளவில் திருடுதல் இணைய தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 4ஆம் நாள் செய்தியாளர்களிடம் கூறினார்.