13ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவர் வாங்யீ ஜூலை 14ஆம் நாள் ஜகார்த்தாவில் 13ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார்.
அவர் கூறுகையில், ஆழமாக மாறி வருகின்ற சர்வதேச மற்றும் பிரதேச நிலைமையில், கிழக்காசிய உச்சி மாநாட்டின் மூலம், இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானமான நிலைமையை செவ்வனே பேணிக்காக்க வேண்டும். முதலாவதாக, ஆசியான் அமைப்பின் மையத் தகுநிலைக்குப் பயன்தரும் முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இரண்டாவதாக, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார்.
மேலும், அதேநாள் நடைபெற்ற ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி முதலியோருடன் சந்திப்பு நடத்தினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் சந்திப்பு நடத்திய போது வாங்யீ கூறுகையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகளை விட பொதுநலன்கள் அதிகம் எனக் குறிப்பிட்ட தோடு, இரு தரப்பும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய உகந்த வழிமுறையை நாட வேண்டும் என்றும், சீனத் தொழில் நிறுவனங்களுக்கு நேர்மையான மற்றும் வெளிப்படையான வணிகச் சூழ்நிலையை இந்தியா வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.