2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள காலத்தில், சீன செய்திஊடகத்தின் சி.ஜி.டி.என். கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
இதன்படி, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புமுறை, உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சிக்கலான உலகலாவிய ஆட்சிமுறைக்கு மேலதிகமான உந்து சக்தியைக் கொண்டு வரலாம் என்று இதில் விசாரணைபடுத்தப்பட்டோர் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை, தெற்குலகு ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் என்று 92.87 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இவ்வமைப்பு முறையின் செல்வாக்கு தொடர்ந்து விரிவாகியுள்ளது என்று 94.2 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் கருத்து வெளியிட்டனர்.
நீண்டகாலமாக, வெளிப்படை, சகிப்புத் தன்மை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் எழுச்சியை இவ்வமைப்பு ஆக்கப்பூர்வமாக நடைமுறைபடுத்தி வருகிறது. உலகின் ஒத்துழைப்பு மற்றும் பலதரப்புவாதத்திற்கு முன்னேற்றும் முக்கிய ஆற்றலை இது மாறியுள்ளது.