வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது தமிழகம் மற்றும் இலங்கை கடற் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் கூறி இருக்கிறது. வருகிற 26 ஆம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழைவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து விட்டால் பிரச்சனை இருக்காது. ஆனால் புயலாக மாறினால் இலங்கை மற்றும் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த புயலுக்கு சவுதி அரேபியா பெங்கல் என பெயரிட்டுள்ளது. சென்னைக்கு இந்த புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர். புயலின் வேகம் மற்றும் திசையை பொறுத்து மழையின் தாக்கம் மாறுபடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.