அடிமட்ட அரசு அதிகாரிகளின் தேவையற்ற பணி சுமையைக் குறைத்தல்

அடிமட்ட அரசு அதிகாரிகளின் தேவையற்ற பணி சுமையைக் குறைப்பதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பணி அமைப்புமுறை கூட்டம் ஒன்று ஆகஸ்டு 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினருமான சைச்சீ இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார்.


அவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வின் எழுச்சியை ஆழமாக கற்றுக்கொண்டு செயல்படுத்தி, சீர்திருத்த எழுச்சியிலும், கண்டிப்பான முறையிலும், அடிமட்ட அரசு அதிகாரிகளின் தேவையற்ற பணி சுமையைக் குறைக்க வேண்டும்.

இதன் மூலம், அடிமட்ட நிலையிலான ஊழியர்கள் முழு மனதுடன் பயன்மிக்க முறையிலும் பணியில் ஈடுப்படலாம் என்றார்.

You May Also Like

More From Author