செப்டம்பர் முதல் நவம்பர் வரை சீனப் பொருளாதாரத்தின் மீட்சி முன்னேற்றப் போக்கு தொடரும்.
பொருளாதாரத்தின் மீட்சி தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. புத்தாக்க ஆற்றல் மேலும் வலிமையாக வளர்ந்து வருகிறது என்பது இதன் ஒரு முக்கிய சமிக்கையாகும். சீனாவின் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் மூலம், பொருளாதாரத்தின் உயர்தரமுள்ள வளர்ச்சி மேம்படுத்தப்படும். நுகர்வின் நிதானமான அதிகரிப்பு என்பது இன்னொரு ஆக்கப்பூர்வமான சமிக்கையாகும்.
பொருளாதார பணி பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பணிக் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்தாண்டின் 9 துறைகளில் முக்கிய கடமைகளில், உள்நாட்டுத் தேவையை பன்முகங்களிலும் விரிவாக்கி வருவதை முதலிடத்தில் வைக்க வேண்டும்.
சர்வதேசப் பார்வையில், நவம்பரில் பொருளாதார சாதனையைப் பெறுவது எளிதாக இல்லை. ஒரு புறம், சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் நிதானமாக விளங்குகிறது.
பொருளாதாரம் நீண்டகாலமாக வளர்ந்து வருவதற்கு ஆதார நிலைமைகள் மற்றும் முன்னேற்றப் போக்கு மாறவில்லை. மற்றொரு புறம், பொருளாதாரத்தின் மீதான தற்போதையக் கொள்கை மற்றும் கூடுதல் கொள்கையின் பயன்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
சீனத் தேசிய பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சீனா உலகின் பல்வேறு நாடுகளுடனான நிதானமான தூதாண்மை உறவு, வெளிநாட்டு பொருளாதார பரிமாற்றங்களுக்கு சிறந்த அடிப்படையை வழங்குகிறது.
அதே வேளையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவின் உயர்தர வளர்ச்சியைக் கூட்டாகவும் விரைவுபடுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறையை ஆழமாக்கி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை சீனா மேலும் விரிவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.