உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக விளங்கும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு

 

2025ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு, புதிய உறுப்பு நாடான இந்தோனேசியா மற்றும் 10 கூட்டாளி நாடுகள், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் இணைந்த பிறகு நடைபெறும் முதலாவது உச்சி மாநாடு ஆகும். இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பின்படி, சமத்துவமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த பொருளாதார உலகமயமாக்கத்தையும் முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை மாறியுள்ளது என்று 91.2 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக, உலகளவில், பிரதேச மோதல்கள் மற்றும் பொருளாதார தாக்குதல்கள் தொடர்ச்சியாக உள்ளன. மந்தமான நிலையிலான உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான குறிப்பிடத்தக்க சாதனையாக பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை திகழ்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியையும், மேலும் நேர்மையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த உலக மேலாண்மை அமைப்புமுறையின் கட்டுமானத்தையும், இந்த அமைப்புமுறை மதிப்புள்ள அனுபவங்களை வழங்கியுள்ளது என்று 89.1 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், கார்பன் குறைந்த தொழில் நுட்பம், நாடு கடந்த மின்னணு வணிக அலுவல் உள்ளிட்ட புதிய துறைகளின் ஒத்துழைப்புகளை பிரிக்ஸ் நாடுகள் முன்னேற்றி வருகின்றன. இது குறித்து, 93.3 விழுக்காட்டினர் தெரிவிக்கையில், இது பொருளாதார கட்டமைப்பின் மேம்பாட்டை முன்னேற்றியதோடு, உலக தொடர்வல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்குப் பயனுள்ள வழிமுறைகளை வழங்கியுள்ளது என்றார். தவிரவும், புதிதாக வளரும் நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகள் நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்கு சீனா மேலதிக அனுபவங்களையும் வாய்ப்புகளையும் வழங்க எதிர்பார்ப்பதாக 90.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author