பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம் நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அக்டோபர் 27ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்துக்குச் சென்று, சிறப்புக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட 200 தொகுப்புகளான தொல் பொருட்கள், கடந்த 100 ஆண்டுகளாக பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தின் வளர்ச்சிச் சாதனைகளைக் காட்டியுள்ளன.
ஷி ச்சின்பிங் கூறுகையில், பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பாதுகாப்பது, சீனாவின் முக்கிய பணிகளில் ஒன்று என்றார். புதிய யுகத்தில், பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம் நல்ல பாரம்பரியங்களை வெளிக்கொணர்ந்து, தொல் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை வலுப்படுத்தி, சீன நாகரிகம் மற்றும் சீனத் தேசத்தை உலகம் அறிந்து கொள்ளும் முக்கிய ஜன்னலாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
