சீன ஊடகக் குழுமமும், ஐ.நாவிற்கான சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவும் கூட்டாக ஏற்பாடு செய்த “அமைதியின் எதிரொலிகள்” என்னும் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு ஆகஸ்டு 13ஆம் நாளிரவு நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார். ஐ.நாவிலுள்ள 30க்கும் மேலான நாடுகளின் தூதர்கள், ஐ.நாவைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 100க்கும் மேலான விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஷென் ஹாய்சியொங் கூறுகையில், இவ்வாண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றிப் பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை முன்னிட்டு ஃபிளையிங் டைகர், தி சிங்கிங் ஆஃப் தி லிஸ்போன் மரு உள்ளிட்ட சீனத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வில் திரையிடப்படுகின்றன. இவற்றிலிருந்து மதிப்புமிக்க அமைதியை ரசிகர்கள் உறுதியாக உணர்ந்து கொள்ளலாம் என்றார். மேலும், சீன ஊடகக் குழுமம், சர்வதேசக் கூட்டாளிகளுடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒற்றுமையுடன் சவால்களைச் சமாளித்து, ஒத்துழைப்புகளின் மூலம் வளர்ச்சியைப் பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“அமைதியின் எதிரொலிகள்”என்னும் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு, ரஷியா, கென்யா, அமெரிக்கா, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.