மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்  

குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான துரைமுருகன் தலைமையில், அவரது தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், துணை மேயர் மற்றும் 17 மாமன்ற வார்டுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

You May Also Like

More From Author