தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மக்கள் சந்திப்பு என அரசியல் தலைவர்கள் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜவரி மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆளுனர் உரையுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதன்பிறகு தார்ச் மாதம் 14-ந் தேதி மீண்டும் சட்டசபை கூடியது. இதில் 2025-2-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் வோளன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 17-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் பொது மற்றும் வேளான் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அதன்பிறகு மார்ச் 24-ந் தேதி முதல், ஏப்ரல் 29-ந் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது.
இதன்பிறகு, சட்டசபை மீண்டும் எப்போது கூடும் என்பது குறித்த தேதி அறிவிக்கப்படாமல், சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை கூட்டம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவையின் அடிப்படை விதியின் கீழ், தமிழக சட்டசபை கூட்டம் இன்று (அக்டோபர் 14) கூடுகிறது. 17-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், “தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும். அப்போது, 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். கடைசி நாளில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்” என்று சபாநாயகர் தெரிவித்தார்.