நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 41 ஆக உயர்ந்துள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) நேபாள நெடுஞ்சாலையில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.