உத்திரபிரதேச அரசின் சமீபத்திய முயற்சியில், அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் சமூக வலைதளங்களில் பரப்புவோருக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அரசின் தகவல்களை பகிர்ந்து அதிக பாலோயர்கள் கொண்டவர்களுக்கு மாதத்திற்கு முறையே 5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த முயற்சி, அரசின் சேவைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும்.
மேலும், யூடியூபில் அரசின் வீடியோக்கள் அல்லது ஷார்ட் ஃபார் கேஸ்டுகள் மூலம் தகவல்களை பரப்புவோருக்கு, அவர்களின் பாலோயர் எண்ணிக்கைக்கு ஏற்ப, 8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டம், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் முயற்சிகளை மிக விரைவாக மக்களுக்கு கொண்டு செல்லும் நவீன வழிமுறையாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தேச விரோத கருத்துக்களை பதிவேடுபவர்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உ.பி. மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதைத் தடுக்கவும், மக்களுக்கு நம்பகமான மற்றும் சரியான தகவல்களை மட்டுமே வழங்கவும் அரசு உறுதியாக உள்ளது.