சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,440 அதிகரித்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்துரூ.7,115க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.101, கிலோ ரூ.1,01,000க்கும் விற்கப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,960-க்கும், ஒரு கிராம் ரூ.7,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.