மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கும் மேலாக நீர் இருப்பு உள்ளதால் சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்கப்படுமாக என்ற எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 புள்ளி 91 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 269 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் நாகை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வயல்களில் நீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு போதுமான நீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், டெல்டா சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும் என அணையின் பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.