இலங்கையின் புதிய அரசுத் தலைவர் திசைநாயக்கவிற்கு சீனா வாழ்த்து

அனுரகுமார திசைநாயக்க இலங்கையின் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் செப்டம்பர் 23ஆம் நாள் கூறுகையில், இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் 21ஆம் நாள் அமைதியாக நடைபெற்றது. புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திசைநாயக்கவிற்கு சீனா மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும், சீனாவும் இலங்கையும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். அரசுத் தலைவர் திசைநாயக்க மற்றும் இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து, பஞ்ச சீல கோட்பாடுகளின் எழுச்சியைப் பரவல் செய்து, இரு நாட்டுப் பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தர கட்டுமானத்தை ஆழமாக்கி, சீன-இலங்கை நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய முன்னேற்றங்களைப் பெறுவதை விரைவுபடுத்த சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author