நவம்பர் 26ஆம் நாள் பிற்பகல், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் டாபூ மாவட்டத்தின் பல வசிப்பிடங்களில் பரவிய தீ விபத்ததானது கடும் உயிரிழப்பையும், பலருக்குக் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்து தொடர்பாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அப்போது அவர், இவ்விபத்தில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரருக்கு அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து, மத்திய அரசின் ஹாங்காங் மற்றும் மக்கௌ அலுவலகம், மத்திய அரசின் தொடர்பு அலுவலகம் ஆகியன ஹாங்காங் சிறப்பு நிர்வாக அரசுக்கு உதவி செய்து தீ விபத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
தற்போது, தொடர்புடைய மீட்புதவிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
