சீனாவின் தியன்கோங் விண்வெளி நிலையத்தில் காய்கறிகள் விளைச்சல்

சீன விண்வெளி வீரர்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் முதல் கீரையை ‘நட்டு’ கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது செழிப்பான அறுவடையை மேற்கொள்ள முடிகிறது. இந்த சாதனை எதிர்காலத்தில் மனிதர்கள் நீண்ட காலம் விண்வெளியில் வாழ்வதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டில் தியாங்காங்-2 விண்வெளி ஆய்வகத்தில், ஷென்ஷோ-11 குழுவினர் முதல் முறையாக கீரை விதைகளை நட்டனர். 2026-இல், ஷென்ஷோ-14 குழுவினருக்கு முதல்முறையாக விண்வெளியில் விளைந்த கீரையை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ஷென்ஷோ-15, 16, மற்றும் 17 திட்டங்களின் அடுத்தடுத்த குழுவினரும் இந்தப் பணியைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, மூன்று வகையான கீரைகளும் செர்ரி தக்காளிகளும் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டின் அக்டோபரில் ஷென்சோ-19 குழுவினர், சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்தனர்.

சமீபத்தில், மண்ணில்லா விவசாய முறையைப் பயன்படுத்தி, ஷென்சோ-21 விண்வெளி வீரர்கள் செர்ரி தக்காளியை அறுவடை செய்தனர். விண்வெளியில் காய்கறிகளை பயிரிடும் சீன விண்வெளி வீரர்களின் முயற்சி தற்போது சீராக விரிவடைந்துள்ளது. இது குழு உறுப்பினர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும். அது மட்டுமல்லாமல், விண்வெளி நிலையத்தில் உள்ள பசுமையான தாவரங்கள், ஆக்சிஜனை நிரப்பி, நீரைத் தூய்மைப்படுத்தி, விண்வெளி வீரர்களுக்கு அமைதியான சூழலைப் பராமரிக்க உதவும் உயிர் ஆதரவு அமைப்பாக செயல்படும்.

இந்த ஆண்டு விண்வெளி வீரர்கள் முற்றிலும் புதிய வகைப் பயிர்களைப் பயிரிடுவதில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர். அந்தத் தனித்துவமான விண்வெளிப் பண்ணையில் அடுத்ததாகப் பயிரிடுவதற்காக, கோதுமை, கேரட் மற்றும் மருத்துவத் தாவரங்கள் ஆகியவை திட்டமிடப்பட்டு வருகின்றன.

 

Please follow and like us:

You May Also Like

More From Author