ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்  

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்க உள்ள தனது புதிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் டாடா மோட்டார்ஸ், தமிழக அரசின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு இரண்டு லட்சம் வாகனத் திறன் கொண்ட இந்த ஆலையில், ஜாகுவார், லேண்ட் ரோவர் மாடல்கள் மற்றும் பிற டாடா பயணிகள் கார்களின் எலக்ட்ரிக் வாகன மாடல்களை அதிகளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author