இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறேன் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!!

Estimated read time 0 min read

சட்டசபை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து, ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவார் என தெரிகிறது.

தற்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இது குறித்து சீமான் கூறியதாவது:

இடைத்தேர்தலில் நான் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட கட்சியினர் விரும்புகின்றனர்.பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது. அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து போட்டியிட இருக்கிறேன். மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author