அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210-ஐ தாண்டியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி புளோரிடாவின் பிக் வளைவை ஹெலீன் சூறாவளி தாக்கியது.
இதனால் புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா உள்ளிட்ட மாகாணங்கள் மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளன. மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான சாலைகள் மூடப்பட்டிருப்பதால் நிவாரண உதவிகளைப் பாதிக்கப்பட்டோரிடம் கொண்டுசேர்க்க அதிகாரிகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வசிப்போருக்கு உதவ மத்திய பேரிடர் உதவித் திட்டத்துக்குத் அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய சூறாவளிகளில் ஒன்றாக ஹெலீன் கருதப்படுகிறது. 2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரினா (Katrina) சூறாவளியில் 1,392 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.