இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம் 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, காசாவில் பொங்கி எழும் போரைக் கையாளும் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்யக் கோரி இஸ்ரேலின் இரண்டு நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமின் தெருக்களில் லட்சக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் சனிக்கிழமை மாலை எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
குறைந்தது 134 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல் அவிவ் நகரில், பணயக்கைதிகள் சிலரின் உறவினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்கள், நகரின் ரிங் ரோட்டை மறித்து போராட்டம் நடத்தினர்.

You May Also Like

More From Author