சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 12 முதல் 16ஆம் நாள் வரை ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்திற்கு பிறகு அவர் சீன செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
வாங் யீ கூறுகையில், இப்பயணத்தில் மூன்று நாடுகளுக்கு தைவான் பிரச்சினையின் வரலாற்று உண்மை மற்றும் சட்ட ஆதாரம் பற்றி அறிமுகப்படுத்தி, தைவான் பிரச்சினை தொடர்பாக ஜப்பானின் தற்போதைய தலைவர் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உறுதியாக எதிர்ப்பதாக தெரிவித்தேன். ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்று, நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமைப்பிரதேச ஒருமைப்பாட்டை சீனா பேணிக்காத்து, நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவதை ஆதரிப்பதாக இம்மூன்று நாடுகள் வலியுறுத்தியுள்ளன என்றார். தைவான் பிரச்சினையில் சீனாவின் நியாயமான நிலைப்பாட்டை அரபு நாடுகள் ஆதரிப்பது, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளைப் பேணிக்காப்பதாகும் என்றும் வாங் யீ தெரிவித்தார்.
