திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:-

ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.

இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

You May Also Like

More From Author