வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

நண்பர்கள் அனைவரும் அங்குள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் மகேஷ், வருண்குமார் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமானார்கள். மற்ற 3 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர். இதனை கண்டு அவரது நண்பர்கள் கதறி துடித்தனர்.

கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

You May Also Like

More From Author