கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

Estimated read time 1 min read

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காத நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை கிருஷ்ணா நதிநீர் கைகொடுத்து வருகிறது.

கண்டலேறு அணையில் இருந்து கண்டலேறு– பூண்டி– சாய் கால்வாய் வழியாக தமிழகத்திற்கு வரும் நீர், தற்போது விநாடிக்கு 400 கனஅடி அளவில் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய குடிநீர் ஏரிகளின் நீர்மட்டத்தை ஓரளவு நிலைநிறுத்த முடிகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் இதுவரை ஒரு டி.எம்.சி.க்கும் அதிகமான கிருஷ்ணா நீர் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author