அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்  

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் தலையாய மரியாதையின் வெளிப்பாடாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை உறுதியுடன் நிலைநிறுத்துவதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.

You May Also Like

More From Author